Total Pageviews

Thursday, 13 June 2013

பறவைகளின் ஆச்சரிய தகவல்கள்

 பறவைகளின் ஆச்சரிய தகவல்கள்


·         ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.    
·         கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.    
·         பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.    மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.    குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.    
·         புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.    ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.    
·         நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.   
·         ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.   
·         மிகப் பெரிய நீர்ப்பறவை அன்னம்.   
·         வெட்டுக் கிளியை வேட்டையாடும் பறவை மைனா.   
·         வான்கோழிகள் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.   
·         நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.   

-

Monday, 10 June 2013

ஆங்கிலம்

ஆங்கிலம்  என்ற மொழிக்கு  பல சிறப்புகள் உள்ளன . ஆனால் அவற்றில் நான்  
முதன்மையாக நினைப்பது  , இம்மொழி  பல சிறப்பான , பல பழைமை
வாய்ந்த அரிய  மொழிகளை  அழித்துவிட்டன  இன்னும் அழித்துக்கொண்டே  இருக்கின்றன. இது தான் இம்மொழியின்  சிறப்பு . இவ்வுலகில் பல நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள இம்மொழி முதலில் தோன்றியது இங்க்லத்தில் தான் . ஆங்கிலயர்கள் இம்மொழியை தங்களின் வியாபார நோக்கதிற்காக , மற்றும்  தங்களின் மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தினர் . ஆனால் இப்பொழுது இம்மொழி பல நாடுகளில் தன் ஆளுமையை   
செலுத்துகின்றன . இம்மொழி தமிழ் , கிரீக் போன்ற  மொழிகளை அழித்தும்,அழித்துக்கொண்டும் இருக்கின்றன .

வெறும் 26 எழுத்துக்களை கொண்ட இம்மொழி 2000,3000 வருடம் பழமை கொண்ட தமிழ் மொழியை , மற்றும் தமிழர்களை  வெளிநாட்டவர் அன்றும் , இன்றும் தலைமையில் இருந்துகொண்டு அழித்துக்கொண்டு இருக்கிறனர்.
இன்று பலர் ஆங்கிலம் பேசுவது மற்றும் படிப்பதே சிறப்பு , வாழ்கை என நினைத்து இம்மொழிக்கு அடிமையாகின்றனர்.
அனால் தன் தாய் மொழியை சிறிது சிறிதாக மறக்கின்றனர் .

காரணம் ஆங்கிலம் படித்தால் தான் தன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றுதான் . அது தான் உண்மை இன்றைய உலகில்.  அப்படி ஒரு நிலைமையில் தள்ளபட்டுளோம் . இதற்கு தீர்வு இல்லவே இல்லை . இதே  நிலைமை  நீடித்தால்  தமிழ்  என்றொரு  மொழி  இல்லாமல்  போகும்  நிலைமைக்கு தள்ளபடுவோம் .இது  தான்  உண்மை  . இல்லையெனில்  இங்குள்ள  அரசியல்  தலைவர்களால் (காங்கிரஸ்) நிச்சயம்  
தமிழர்களை ,  மற்றும் தமிழ் மொழியை  அழித்துவிடுவார்கள் . 

நன்றி ,




  

குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?

 
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
விளையாட்டு, தொலைக்காட்சி, உறவினர் வீடு, சுற்றுலா இப்படி பல்வேறு வகையில் பொழுது போக்கிய மாணவர்களுக்கு மீண்டும் புத்தகம், படிப்பு, பரீட்சை என இன்று முதல் ஓட்டம் தொடங்குகிறது.
இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் பள்ளி செல்லும் போதே சற்று சேர்வாக காணப்படும் மாணவர்கள், 2 மாத விடுமுறைக்குப் பின்னர் அதுவும் கூடுதலாக 10 நாள் விடுமுறை.
இவை எல்லாம் முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகள் மனரீதியாக சந்திக்கும் சவால்கள் என்ன? அவற்றை பெற்றோரும், ஆசிரியர்களும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
இவை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரன் பேட்டி அளித்தார்.
அடம் பிடிக்க காரணம் "பிரிவு பயம்" : பள்ளிக்கு முதன் முதலாக செல்லும் குழந்தைகளுக்கு தான் பிரச்னைகள் அதிகம் என உளவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அப்பா, அம்மா என குடும்பத்தினர் அரவணைப்பில் மட்டுமே இருந்த குழுந்தை முதன் முறையாக புதியதொரு சூழலுக்குச் செல்லும் போது பிரிவு பயம் ஏற்படும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் கூட ஏற்படலாம். இதற்கு நல்ல தீர்வு முதன் முறையாக பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர்கள் அரவணைத்துக் கொள்வதே ஆகும் என மருத்துவர் தெரிவிக்கின்றார்.
பிரிவு பயம் நீண்ட நாளாக இருக்கும் குழந்தைகளை அவர்களுக்கான மனநல மருத்துவர்களிடம் காட்டி சரி செய்தல் அவசியம்.
பிரிவு பயம் இருக்கும் குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் வகையில் வயிற்று வலி, பல் வலி என நாளுக்கு ஒரு நோவு ஏற்பட்டதாக கூறலாம். ஆனால் அதே வேளையில் குழந்தைகள் தொடர்ச்சியாக உடல் உபாதைகள் குறித்து கூறினால் அவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது.
பெற்றோர்களே...தவறான வழிகாட்டுதல் கூடாது: வீட்டில் குறும்புத் தனம் செய்யும் குழந்தைகளுக்கு நம் வீட்டுப் பெரியவர்கள் முதலில் சொல்வது
"நீ சேட்டை செய்தால் பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுவேன். டீச்சரிடம் சொல்லி திட்டச் செய்வேன், அடிக்கச் சொல்வேன்"
இது மிகவும் தவறான வழிகாட்டுதல். இவ்வாறு சொல்வதன் மூலம் சிறு குழந்தை மனதில் பள்ளிக்கூடம் என்பது ஏதோ சித்ரவதைக் கூடம் என தோன்றி விடும்.பெற்றோகள் எப்போதும் இவ்வாறான தவறான வழிகாட்டுதலை குழந்தைக்கு ஏற்படுத்தக் கூடாது. மாறாக பள்ளிக்கூடம் சென்றால் சக வயதில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிதாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என எடுத்துரைத்து ஊக்குவிக்க வேண்டும்.
ஆரியர்களுக்கும் பங்கு உண்டு: பள்ளிக்கு முதன் முதலாக வரும் குழந்தையாக இருக்கட்டும் இல்லை வளர்ந்த குழந்தையாக இருக்கட்டும் ஆசிரியர்கள் அனுகுவதற்கு எளிமையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவராகவும் இருக்க வேண்டும். கண்டிப்பு அவசியம் ஆனால் கடுமையான தண்டிப்பு தேவையில்லை. அடிப்பதோ, கடுமையான வார்த்தைகளால் குழந்தையை திட்டுவதோ நிச்சயம் சரியான அணுகுமுறை அல்ல. ஒரு குழந்தை உள ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதில் ஆசிரியர்கள் பங்கும் உண்டு.
குழந்தையை பள்ளிக்கு கிளப்புவதும் ஒரு கலை: இன்றைய அவசர உலகத்தில் எல்லாமே எந்திரத் தனமாகி விட்டது. குழந்தையை பள்ளிக் கிளப்புவதும் கூட அப்படித் தான். அப்படி அல்லாமல் குழந்தையை பள்ளி செல்ல தயார் செய்வதை பெற்றோர்கள் உற்சாகத்தோடு செய்ய வேண்டும்.குழந்தையை திட்டிக் கொண்டே கிளப்பி விடுதல் கூடாது.
குழந்தையை எழுப்பி விடும் நேரம், சிறு உடற்பயிற்சி, காலைக் கடன், குளித்தல், சரி விகிதத்தில் சத்தான உணவு, பழங்கள் ஆகியனவற்றை சாப்பிட வைத்தல் என திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். 
வெளியில் விற்கும் உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது, இருமினால், தும்மல் ஏற்பட்டால் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும், டாய்லெட் பயன்படுத்திய பின்னர் கைகைளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற பொதுச் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அவற்றை பின்பற்ற குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளை இரவில் சீக்கிரம் தூங்க வைக்க வேண்டும்.
பெற்றோர்களின் அன்பும், ஆசிரியர்களின் அரவணைப்பும் கிடைக்குமானால் எந்த ஒரு குழந்தையும் நிச்சயமாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நிதர்சனம்.
posted by
GVR..,


வேகமாய் சாகிறது பூமி !

OUR EARTH IS DEPLETING FAST!!!! BEWARE_SHARED POST( TAMIL VERSION)

வேகமாய் சாகிறது பூமி !

தண்ணீரில் இருக்கும் கனிமங்களின் அளவை டி.டி.எஸ். (Total dissolved solids) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 300 புள்ளிகளுக்குள் இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத் தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் - ஸின் அளவு 3,000-தைத் தாண்டிவிட்டது'' - சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் மற்றும்லயோலா கல்லூரியின் என்விரோ கிளப் இணைந்து 'முந்நீர் விழவு’ என்ற பெயரில் நடத்திய தண்ணீர்பற்றிய பண்பாட்டு, அரசியல் கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சிப் புள்ளிவிவரம் இது.

ஆற்று நீர், கடல் நீர், குடிநீர் - இந்த மூன்றுவிதத் தண்ணீரின் வளத்தையும் வணிக நோக்கில் மனிதன் எவ்வாறு எல்லாம் சூறை யாடுகிறான் என்பதைப் பற்றி அந்த நிகழ்ச்சி யில் பகிர்ந்துகொள்ளப்பட்ட பல தகவல்கள் பகீர் திகீர் ரகம்.

கடல் நீரின் மாசு குறித்து ஆவேசமும் ஆதங்கமுமாக விவரித்தார் பேராசிரியர் லால்மோகன். ''கருங்கடல், காஸ்பியன் கடல் போன்றவை அடர்த்தி மிகுந்தவை. அங்கு உயிரினங்கள் மிகக் குறைவு. அதில் மீன்கள் இருந்தாலும் அவற்றை அந்தக் கடல் சார்ந்த தேசத்தினர் சாப்பிடுவது கிடையாது. அந்த கடல்களின் நிலை மற்ற கடல்களுக்கும் வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இந்த ஆண்டு ஆறு லட்சம் டன் பெட்ரோல் கடலில் சிந்தி இருக்கிறது. டன் கணக்கில் நிலக்கரியும் ஆலைக் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. அணு மின் நிலையங்கள் வெளியேற்றும் வெப்பக் கழிவு நீரால் கடலின்  அந்தப் பகுதியில் இருந்து மீன்கள் வெளியேறிவிடும். மீன்கள் வெளியேறினால் மீனவனும் வெளி யேற வேண்டியதுதான். இன்று இந்தியா ஆண்டு ஒன்றுக்கு நான்கு மில்லியன் மெட்ரிக் டன் கடல் உணவை அறுவடை செய்கிறது. முந்தைய அளவை ஒப்பிட்டால், இது பாதி தான். உற்பத்தியின் அளவு மட்டும் அல்ல... இன்று மீனவர்கள் பிடிக்கும் வஞ்சிரம், சுறா, சாளை, சங்கரா போன்ற மீன்களின் உருவ அளவும் பாதியாகக் குறைந்துவிட்டது!'' என்றார்.


கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு, கடலுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்கினார். ''கன்னியாகுமரி கடல் பகுதியை லட்சத்தீவு கடல் என்கிறார் கள். உண்மையில் அதை குமரிக் கடல் என்றுதான் அழைக்க வேண்டும். ஏனெனில், கன்னியாகுமரி கடலில் சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழிந்துபோன சங்கத் தமிழ் நகரங்களின் எச்சங்களும் மலைத் தொடர்களும் மூழ்கிக்கிடக்கின்றன. இந்த இடிபாட்டுப் பகுதிகள் சுறாக்கள் இனப் பெருக்கம் செய்ய உகந்தவை. கடலில் உள்ள நீரோட்டங்களை நன்கு அறிந்தவை ஆமை கள். செயற்கைக்கோள் உதவியுடன் ஆமை களை ஆராய்ந்ததில் ஓர் உண்மை தெரிந்தது. ஆமைகள் தமிழகக் கடலில் பாயும் நீரோட் டங்களின் வழியே நீந்தாமல் மிதந்து சென்றே பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து பல்வேறு நாடுகளைச் சென்றடைகின்றன. இது இன்று, நேற்று நடப்பதல்ல. 65 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசருக்கு இணையான மூதாதையரான இந்த ஆமை கள், காலம் காலமாக இப்படித்தான் கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களை முட்டையிட தேடிச் செல்கின்றன. ஆமைகள் அப்படிச் செல்லும்போது அதனைப் பின் தொடர்ந்து சென்று கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலை யும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. உலகெங்கும் உள்ள ஊர்களில் தமிழ் வாசம் வீசுகிறது. அவை எல்லாம் தமிழர்கள் ஆமையைப் பின்பற்றிச் சென்று கடல் வழி நீரோட்டப் பயணங்கள் மூலம் நிலங்களைக் கண்டடைந்ததன் விளைவுகள். ஆனால், இன்று அந்த ஆமைகளைப் பெருமளவு அழித்துவிட்டோம். கடலின் நீரோட்டங் களில் பல்வேறு வண்ணங்களில் அடித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஜெல்லி மீன்கள் என்று நினைத்துச் சாப்பிடும் ஆமைகள் இறந்துபோகின்றன.

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!'' என்று முடித்தார்.
ஆற்று நீரைப் பற்றி பேராசிரியர் ஜனகராஜன் சொல்லும் தகவல் அதிர்ச்சியின் உச்சம். ''தமிழகத்தில் காவிரி, பாலாறு, வைகை உட்பட 17 நீர்ப் பிடிப்புப் பகுதிகள் இருக்கின்றன. இவை இல்லையெனில், தமிழகம் பாலையாகிவிடும். ஆனால், காவிரி தொடங்கி பாலாறு வரை தோல் தொழிற்சாலைகள், சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் ஆற்றை விஷமாக்கி வருகின்றன. பாலாற்றங்கரையில் மட்டும் சுமார் 800 தொழிற்சாலைகள் இருக்கின்றன. இவை வெளியிடும் குரோமியம் கழிவு நீர் கலந்த குடிநீரைத்தான் சென்னையின் பாதி மக்கள் குடிக்கிறார்கள். பாலாறு பகுதியில் இருக்கும் 46 ஊர்களில் 27,800 கிணறுகளின் தண்ணீரை உபயோகிக்கவே முடியவில்லை. கிணற்றை எட்டிப் பார்த்தாலே ரசாயன நெடி தாக்குகிறது. உலகிலேயே மிகவும் மாசு பட்ட நதி என்று குளோபல் மேப்பில் குறிப்பிடப்பட்டு இருப்பது பாலாறு மட்டுமே. இதை நம்ப மறுப்பவர்கள் பாலாற்றின் வறண்ட பகுதியைப் போய்ப் பாருங்கள். நமக்குச் சோறிட்ட அந்தத் தாயின் உடல் முழுவதும் நீலம் நீலமாக ரசாயனத்தால் பூத்துக்கிடக்கிறது.

தோல் தொழிற்சாலைகளால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி வருகிறது என்கிறது அரசு. உண்மைதான். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அவ்வளவு தோல் பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. ஏன்? அமெரிக்கா, ஐரோப்பாவில் கால் நடைகள் இல்லையா? அந்த நாடுகளுக்குத் தோல் பொருட்களைத் தயாரிக்கத் தெரியாதா? தெரியும். ஆனால், செய்ய மாட்டார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது டர்ட்டி இண்டஸ்ட்ரி!'' என்கிறார் கோபத்துடன்!

குடிநீரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் சரவண பாபு கூறியது கவனிக்கத்தக்கது. ''15 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீரை எடுக்க நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. மினரல் வாட்டர் நிறுவனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை நாள் ஒன்றுக்குக் குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க முடியும். தவிர, தனியாக இன்னொரு போர்வெல் போட்டு மழை நீர் மற்றும் பயன்படுத்தப்பட்ட தீங்கு இல்லாத நீரைச் சேகரித்து மீண்டும் பூமிக்குள் செலுத்த வேண்டும். வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் போர்வெல் போட வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், அந்தச் சட்டம் காலப்போக்கில் நீர்த்துவிட்டது. மினரல் வாட்டர் நிறுவனங்கள் தாங்கள் குறிப்பிட்ட அளவு தண்ணீரை பூமிக்குள் மீண்டும் செலுத்து வதாகச் சொல்கின்றன. உண்மையில், சுத்திகரிக்கப் பட்ட பின்பு கிடைக்கும் கழிவு நீரைத்தான் அவை பூமிக்குள் செலுத்துகின்றன. அதில்தான் டி.டி.எஸ். அளவு இன்னும் மிக அதிகமாக இருக்கும்.

நாம் குடிக்கும் ஒரு லிட்டர் குடிநீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்தநாகம், ஃப்ளோரைடு தலா ஒரு மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம் அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் பரவலாக நாம் குடிக்கும் ஒரு லிட்டர் தண்ணீரில் மேற்கண்ட அளவைவிட மூன்று மடங்கு கூடுதலாக ரசாயனக் கனிமங்கள் இருக்கின்றன. இதனால் சுவாச நோய், மன நோய், ரத்த சோகை, பற்களில் கறை, எலும்பு நோய்கள், சிறுநீரகக் கற்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடனடியாக தமிழகம் சுதாரிக்க வேண்டிய சூழல் இது!'' என்று எச்சரித்தார்.

இயற்கை விவசாயத்தில் மாற்றுப் பாதையை முன்னெடுக்கும் பாமயன் இறுதியாகக் கூறியது முத்தாய்ப்பான உண்மை. ''பூமியை ஓர் உயிரினம் என்பார்கள். செயற்கைக்கோளில் இருந்து பார்த்தால், பூமி மூச்சுவிட்டுக்கொண்டு மெலிதாக அசைவதுபோலத் தெரியும். அந்த உயிரினம் வேகமாகக் கொலை செய்யப்பட்டுவருகிறது. இதற்கு மேலும் அதை அழிக்க முற்படாதீர் கள். மீறினால் அந்த உயிரினம் மனித குலத்தை அழித்துவிடும்!''

posted by
GVR..,

ஜான் கென்னடி


நம்பமுடியாத அதிசயம்..! ஆனால் உண்மை..!

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறிவியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாதவையாக அவை தோன்றினாலும் கூட நம் அறிவுக்கெட்டாத ஏதோ ஒருவிதிஅந்த நிகழ்வுகளை சீரான முறையில் இயக்கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதாரபூர்வமான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?

முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்-

1.
ஆப்ரகாம் லிங்கன் 1860 ஆம் ஆண்டும், ஜான் கென்னடி 1960 ஆம் ஆண்டும் அமெரிக்க ஜானாதிபதியானார்கள். சரியாக நூறு வருட இடைவெளி.

2.
இருவரும் வெள்ளிக்கிழமை அன்று, தத்தம் மனைவிகளின் அருகில் இருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

3.
இருவர் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வாழும் போது பிள்ளை பெற்றனர். பிறந்தவுடன் குழந்தை இறந்தும் போனது.

4.
இருவரும் தலையின் பின்பகுதியில் குண்டு துளைத்துச் செத்தார்கள்.

5.
இருவரும் இறந்த பின் ஜான்சன் என்ற பெயருள்ளவர்கள் உடனே ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார்கள். (ஆண்ட்ரூ ஜான்சன், லிண்டன் ஜான்சன்)

6.
ஆண்ட்ரூ ஜான்சன் பிறந்தது 1808. லிண்டன் ஜான்சன் பிறந்தது 1908. சரியாக அதே நூறு வருட இடைவெளி.

7.
இருவரையும் கொன்றவர்கள் பிறந்த வருடங்கள் கூட நூறு வருட இடைவெளிகள். ஜான் வில்க்ஸ் பூத் பிறந்தது 1839. லீ ஹார்வி ஆஸ்வால்டு 1939.

8.
இரு கொலைகாரர்களும் பிடிபட்டு வழக்குத் தொடுப்பதற்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

9.
பூத் லிங்கனை ஒரு தியேட்டரில் கொன்று விட்டு ஒரு கிடங்குக்கு ஓடினான். ஆஸ்வால்டு ஒரு கிடங்கிலிருந்து கொன்று விட்டு தியேட்டர் நோக்கி ஓடினான்.

10. லிங்கனின் செயலாளரின் முன் பெயர் ஜான். ஜான் கென்னடியின் செயலாளரின் பின் பெயர் லிங்கன்.

இன்னொரு சம்பவம் Life பத்திரிக்கையில் வெளியான உண்மை சம்பவம். இதனை வாரன் வீவர் என்ற கணித அறிஞர் தன் புத்தகம் ஒன்றிலும் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் உள்ள Beatriceஎன்ற சிறிய நகரில் உள்ள ஒரு சர்ச்சில் 1950 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி 15 பாடகர்கள் சேர்ந்து கூட்டாக சரியாக காலை 07.20 மணிக்குப் பாடுவதாக இருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறு வேறு காரணங்களுக்கு சர்ச்சிற்கு வர அதிக தாமதமாகி விட்டது. ஒருத்தி ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் ஆழ்ந்து போய் கிளம்பத் தாமதமானது. இன்னொருத்தி கணிதப்பாடம் எழுதி முடித்துக் கிளம்பத் தாமதமானது. ஒருவருக்குக் காரை ஸ்டார்ட் செய்வதில் பிரச்சினைஇப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காரணம். இவர்கள் சரியான நேரத்திற்குள் வந்து சேராததே இவர்களைக் காப்பாற்றியது என்பது தான் அதிசயச் செய்தி. காலை சரியாக 07.25 க்கு வெடிகுண்டு வெடித்ததில் சர்ச் தரை மட்டமாகியது.

1900
ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இத்தாலிய அரசர் உம்பர்டோ (King Umberto I) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஓட்டலில் உணருந்தச் சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அந்த ஓட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஓட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்ட்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூட்டிய அதே நாளில் தான் அந்த ஓட்டல் உரிமையாளர் அந்த ஓட்டலைத் துவக்கினார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14-03-1844. ஆச்சரியத்தோடு அந்த ஓட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29-07-1900 அன்று அந்த ஓட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கி சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்.

ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883 ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உராய்சிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை. எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணம் அடைந்தான். பல வருடங்கள் கழித்தும் அந்தக் குண்டு பழி தீர்த்துக் கொண்டது போல அல்லவா இருக்கிறது. இந்த இரு சம்பவங்களும் ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் என்ற புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

Ohio
வில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு l எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்குToy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்.

மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது.

இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஒரு அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு விதியை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?



சீமைக் கருவேலம்

சீமைக் கருவேலம் (Prosopis juliflora) அல்லது வேலிக்காத்தான் எனப்பரவலாக அறியப்பட்ட இது வேளாண் நிலங்களை மற்றும் வாழ்வாதரங்களை நாசப்படுத்தும் மிகக்கொடியத் தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா Prosopis juliflora வாகும். இதை எசுப்பானிய மொழியில் bayahonda blanca என அறியப்படுகிறது. மெக்சிகோ,கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாக கொண்ட இவை ஆசியஆசுதிரேலியக் கண்டங்களில் மிகப்பெரும் நச்சுக்களையாக உருவெடுத்துள்ளது.

1.பயிர்களுக்கு வேலியாகவும் சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950களில்ஆசுத்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த அறுபது ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு வேளாண் கண்காட்சியில் மட்டும் வைக்கப்பட்டுவருகிறது.

2.மரம் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது புளியமர இலைகளைப் போல் சிறு இலைகளையும், கருவேலமரத்தை ஒத்தும் காணப்படுகின்றன. இவைகள் மஞ்சள் நிற நீண்ட பூக்களையும், பச்சை நிறக்காய்களையும் முதிர்ச்சியில் மஞ்சளாக மாறிவிடும். இதன் வேர் நிலத்தில் ஆழச்சென்று நிலத்தடி நீரையும் உறிஞ்சக்கூடியது. இதன் வேர் (53 மீட்டர்) 175 அடி நீலம் வளரக்கூடியதென பதிவிடப்பட்டுள்ளது. இதன் தண்டுப்பகுதிகளில் திரவ ஒழுக்கு காணப்படும்.

3.எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி , தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இவை ஆழ வேர் மட்டுமில்லாமல் உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் செல்வதை தடைசெய்கிறது. எந்த நோயினாலும் பூச்சிகளாலும் தாக்க முடியாத, எந்த இடத்திலும் மற்ற தாவரங்களை அழித்துவிட்டு தான் மட்டும் செழித்துப் படருகின்ற தன்மை வேலிக்காத்தானுக்கு மட்டுமே உண்டு. இவை வாழும் இடத்தில் உற்பத்தி செய்யும் நச்சுப்பொருளால் நிலத்தில் பிற செடிகள் வளர்வதை அறவே தடுக்கிறது.

4.
  • விவசாயம் மற்றும் ஏனைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.
  • அடர்ந்து வளர்ந்து பெரும் பகுதியே ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது
  • நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துபவை.
  • புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பேற்படுத்துகிறது.
  • நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அரிய மூலிகைகளின் இழப்பு
  • இவைகளின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன
இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன. இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன.

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது. தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது. இதனை களைய பல அரசு மற்றும் தன்னார்வள தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் 
கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், 
தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் 
பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய 
விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க 
வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம்
துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க 
கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் 
கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். 
முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் 
ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், 
தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த 
விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் 
ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.

 posted by
GVR..,

பஞ்ச பூதங்களை பதம் பார்க்"கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி"

பஞ்ச பூதங்களை பதம் பார்க்"கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி"


பஞ்ச பூதங்களை பதம் பார்க்கும் கருவேல மரங்கள் : விவசாயத்தை சீரழிக்கும் கொடூர "கிருமி'


பயனற்ற தாவரமாக கருதப்பட்ட இவற்றை, தற்போது பணம் கொழிக்கும் பொருளாக 
பாவித்து வளர்க்கத்தொடங்கிவிட்டனர். அந்த அளவுக்கு இங்கு கருவேல மரங்களின் 
ஆக்கிரமிப்பு வந்தாகிவிட்டது. இருந்தும் இந்த கருவேல மரங்களால் ஏற்படும் 
பாதிப்பை ஒருசிலரை தவிர பலரும் உணரவில்லை. இன்று நாம் சிந்தும் ஒவ்வொரு 
வியர்வைக்கும் மூல காரணமாக இருப்பவை இந்த 
கருவேல மரங்கள் தான். புவிவெப்பமயமாகி வருவதற்கு பேருதவியாக இருப்பவை இந்த 
கருவேல மரங்களே. அதன் பிடியில் சிக்கி தவித்து வரும் இம்மாவட்டம், எப்படி 
மீண்டு வரப்போகிறது என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐந்தறிவு உயிரினங்களின் புறக்கணிப்பு: கருவேல மரங்களின் இலை, காய், விதை 
போன்றவை எந்த உயிரினத்திற்கும் பயன்படாதவை. இம்மரத்தின் நிழலில் 
கட்டிவைக்கப்படும் கால்நடைகள் "மலடாக' மாறும் என்பது, சமீபத்தில் 
கண்டறியப்பட்டுள்ளது. இவற்றின் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றும் தன்மை 
கொண்டது. அதே நேரத்தில் இவை முளைத்துள்ள பகுதியில் வேறு செடிகள் 
வளரமுடியாது. இவற்றின் விஷத்தன்மை அறிந்தே, இதன் மீது எந்த பறவையும் 
கூடுகட்டுவது இல்லை. ஐந்தறிவு கொண்ட உயிரினங்கள் அனைத்தும், கருவேல மரங்களை
ஒட்டுமொத்தமாக புறக்கணித்து வருகின்றன. இதை அறியாமல் மனிதர்கள் தான், 
தற்போது கருவேல மரங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர். இதனால் 
ஏற்படும் விளைவுகளும் தங்களை தான் சேரும் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.

ஆமோதித்தது அறிவியல்: கருவேல மரங்கள் குறித்த கருத்துகளை பாட்டி கதைகள் என
நினைப்பவர்களுக்கு , அவற்றின் ஆபத்தை அறிவியலும் உணர்த்தியுள்ளது. கருவேல 
மரங்கள் ஆக்சிஜனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில் 
கரியமிலவாயுவை அதிக அளவில் உற்பத்தி செய்து விடுகிறது. இதனால் சுற்றுப்புற 
காற்று மண்டலம் மாசுபடுகிறது. மாசுபடுகிறது என்பதை விட நச்சு தன்மைக்கு 
மாறுகிறது என்றே கூறலாம். அந்த அளவுக்கு காற்றை மாசுபடுத்தும் தன்மை கருவேல
மரங்களுக்கு உண்டு. இவை அனைத்தும் அறிவியல் ஆய்வாளர்களால் உறுதி 
செய்யப்பட்ட தகவலாகும். அதன் பிறகும் கருவேல மரங்கள் வளர்ச்சியை வேடிக்கை 
பார்த்து வருவது, நமது சந்ததிகளுக்கு நாமே தீ வைப்பதற்கும் சமமாகும். 
இன்றுள்ள நிலைப்படி, ராமநாதபுரத்தின் வறட்சி நிலை, இன்னும் 10 ஆண்டுகளில் 
இருமடங்காகும் வாய்ப்புள்ளது. இதை அனுபவசாலிகள் மட்டுமல்ல, அறிவியல் 
ஆய்வாளர்களும் ஆமோதித்து வருகின்றனர். இருந்தும் பொதுமக்கள் தரப்பில் இது 
குறித்த புரட்சி எப்போது வரப்போகிறது என்பது தான் கேள்வி.


கொடூரமும், கோரமும்: பட்டா, புறம்போக்கு நிலங்களில் கம்பீரமாய் காட்சி 
தரும் கருவேல மரங்களை நாம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. ஆனால் அதன் வேர் 
செய்யும் வேலைகளை நாம் அறிந்திருப்பதில்லை. எந்த வறட்சியிலும் வளரக்கூடிய 
தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை 
உறிஞ்சி , தனது இலைகளை வாழவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அடுத்தவர் உயிரை 
உறிஞ்சி வாழ்பவர்களை சுயநலக்காரர்கள் என நாம் அழைக்கிறோம். நமது நீரை 
உறிஞ்சி வாழ்ந்து, நமக்கே உலை வைக்கும் இந்த கருவேல மரங்களை என்னவென்று 
அழைப்பது? நிலத்தடி நீரை முடிந்த வரை "சுவாகா' செய்வதால், பூமி தானாகவே 
வறண்டு விடுகிறது. இதை அறியாத நாம் வருணபகவான் மீது பழியை போட்டு, பகைத்து 
வருகிறோம். கருவேல மரத்தின் இந்த கொடூரம், தமிழகத்தில் இங்கு தான் அதிகம் 
அரங்கேறி வருகிறது.

காற்றையும் விட்டுவைக்கவில்லை! நிலத்தடி நீரை 
பால்படுத்தும் கருவேலமரங்களின் தாகம் அத்துடன் நிறைவடைவதில்லை. தன்னை 
சுற்றி தழுவி வரும் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. 
இதனால் அப்பகுதியில் வறட்சி என்பது தவிர்க்க முடியாததாகவும், 
நிலையானதாகவும் மாறிவிடுகிறது. தென் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் 
மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் கருவேல மரங்களால் அபகரிக்கப்படுவது அதிக 
அளவில் உள்ளது. இதை அறியாமல் கருவேல மரங்களை நாமே வளர்த்து வருகிறோம் 
என்பது தான் வேதனையிலும், வேதனை. நிலம், நீர் வரிசையில் கருவேல மரங்கள் 
காற்றையும் விட்டு வைக்கவில்லை. பஞ்சபூதங்களையும் ஏதாவது ஒரு வகையில் பதம் 
பார்த்து வரும் கருவேல மரங்களுக்கு முடிவு கட்டும் நாள் விரைவில் 
வரவேண்டும். நம்நாட்டின் மண்ணின் தன்மையை பாதிக்க, வெளிநாட்டினர் தூவிய 
விதையே இந்த கருவேல மரங்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதை உறுதி 
செய்யும் விதமாகவே கருவேல மரங்களின் செயல்பாடுகள் உள்ளன. உலகில் வேறு 
எங்கும் இந்த அளவு கருவேல மரங்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் 
ராமநாதபுரத்தில் காணப்படுவதை போல வேறு எங்கும், இத்தனை மரங்கள் தென்பாடாது.

"வளர்ப்போம்' கோஷத்தில் மாற்றம்! உலகம் ஒட்டுமொத்தமாக வெப்பமயமாகி வரும் 
நிலையில், அதை தடுக்க மரங்களை வளர்க்க அரசு மற்றும் தன்னார்வலர்கள் 
வலியுறுத்தி வருகின்றனர். இப்படி உலகம் முழுவதும் மரங்களை வளர்க்க கோஷங்கள்
எழுப்பபடுகிறது. இந்த நேரத்தில் கருவேல மரங்களை மட்டும் அழியுங்கள் என்று 
சொல்ல வேண்டிய கட்டாயமும் நேர்ந்துள்ளது. மரங்களுக்குரிய தன்மையை 
களங்கப்படுத்தும் இந்த கருவேல மரங்களால், புவியில் ஜீவராசிகள் 
சந்திக்கப்போகும் பிரச்னைகள் நிறைய உள்ளது. "மரம் நட விருப்பமில்லை,' என, 
நினைப்பவர்கள், நீங்கள் என்றால், கருவேல மரங்களை அழிப்பதற்காவது 
முன்வாருங்கள். இம்மாவட்டத்தில் மரம் நடுவது அவசியம் என்றாலும், அதே 
அளவுக்கு கருவேல மரங்களை அகற்ற வேண்டியதும் அவசியமாகும். அந்த வகையில் 
"மரங்களை வளர்ப்போம்' கோஷத்தில், "கருவேல மரங்களை அகற்றுவோம்,' என்ற, 
கோஷமும் இணைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டில் "கெட் அவுட்': உலக 
ஆட்சி, அரசியலில் முத்திரை பதித்து வரும் அமெரிக்காவில், கருவேல மரங்களை 
வளர்க்கவிடுவதில்லை. அங்குள்ள தாவிரவியல் பூங்காக்களில் நச்சுத்தன்மை உள்ள 
மரங்கள் குறித்த பட்டியல் குறிப்பிடப்பட்டிருக்கும், அதில் முதலிடம் நம்ம 
ஊர் கருவேல மரங்களுக்கு என்பதை நாம் இந்த நேரத்தில் அறிய வேண்டும். 
அமெரிக்கர்களை போல வாழ நினைப்பது மட்டும் போதாது, அவர்களின் செயலையும் 
கடைபிடிக்கலாமே. இங்கோ ரோட்டின் இருபுறத்திலும் கருவேல மரங்கள், வீட்டின் 
வேலிகளாக கருவேல மரங்கள், என, முழு புழக்கத்தில் உள்ளனர். வெளிநாடுகளில் 
"கெட் அவுட்' சொல்லப்பட்ட, கருவேல மரங்களுக்கு இங்கு "வெல்கம்' கூறி, 
நமக்கு நாமே வேட்டு வைக்கிறோம்.

கேரள குளுமைக்கு காரணம் என்ன? 
ராமநாதபுரம் மாவட்டவாசிகள் கோடை சுற்றுலாவுக்கு கொடைக்கானல், கேரளாவுக்கு 
செல்வது வழக்கம். காரணம் அவையெல்லாம் இங்குள்ளவர்கள் பார்க்க முடியாத 
குளிர்ந்த பிரதேசங்கள். கேரளாவை எடுத்துக்கொண்டால், கருவேல மரங்கள் குறித்த
விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் முழுமையாக பரப்பிய மாநிலமாகும். 
இதனால் அங்கு கருவேல மரங்களை காணமுடியாது. இங்குள்ள கருவேல மரங்களை 
அகற்றினால், நமது மாவட்டமும் கேரளவின் பொலிவுக்கு திரும்பும். கடலோர 
மாவட்டமாக ராமநாதபுரம் இருந்தும், போதிய மழைப்பொழிவு இல்லை என்றால், அதற்கு
காரணம் கருவேல மரங்களின் தலையீடே ஆகும்.

காசு செய்யும் வேலை: 
உதாசீணப்படுத்தப்பட்ட கருவேல மரங்களின் விறகுகள், விற்பனையில் நல்ல லாபத்தை
தருகின்றன. இதை கருத்தில் கொண்டு பலரும் கருவேல மரங்களை வளர்க்க 
தொடங்கிவிட்டனர். அதற்கு ஏற்ப சூழல் இங்கு தாமாகவே அமைந்துவிட்டதால், 
விவசாயிகள் பலரும் கருவேல மரங்களை விரும்புகின்றனர். எந்த செலவும் 
இல்லாமல், எளிதில் லாபம் கிடைக்கும் வியாபாரமாக கருவேல மரங்கள் மாறிவிட்டன.
லாபத்தை கணக்கிடுபவர்களுக்கு அதன் பின்னணியில் உள்ள சோகத்தை அறிவதில்லை. 
கரி மூட்டம் போட்டு மேலும் புகையை கிளப்பி, காற்றை மாசுபடுத்துகின்றனர். 
இருந்தும் கெடுத்தது போதா தென்று, இறந்தும் காற்றை மாசுபடுத்தும் வேலையை 
கருவேல மரம் தெளிவாக செய்கிறது. பணத்தின் மீதுள்ள மோகத்தில் நம்மவர்களும், 
கருவேல மரங்களை நம்பி விவசாயத்தை கைவிட்டனர். இன்று பல விளைநிலங்களில் 
கருவேல மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஆண்டு கணக்கில் வளரச்செய்து,
அறுவடைக்கு காத்திருக்கும் பக்குவத்திற்கு இங்குள்ளவர்கள் பழகிவிட்டனர். 


வளம் காண அணுகுங்கள் வனத்துறையை...: தரிசு நில மேம்பாட்டு 
திட்டத்தில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. மானிய 
விலையில் கிடைக்கும் இந்த மரக்கன்றுகளை, அவர்கள் கூறும் வழிமுறைகளை 
பின்பற்றி வளர்த்தால் நிச்சயம் இப்பகுதி பசுமையாக மாறும். ஒவ்வொரு 
பகுதிக்கும் ஏற்ப வகையில் வளரும் தன்மையுடைய மரங்கள் இதற்காக தேர்வு 
செய்யப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டோர், தங்கள் பகுதியின் வனத்துறை அதிகாரிகளை
தொடர்பு கொண்டு, தேவையான மரக்கன்றுகளை வாங்கி பயன்பெறலாம். பிற 
மாவட்டங்களில் எத்தனையோ பேர் இத்திட்டத்தை பின்பற்றி, மரங்களை வளர்த்து 
வருகின்றனர். நம்மாவட்டத்தில் இது பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாக 
உள்ளது. இனியாவது பிரயோஜனம் உள்ள மரங்களை தேர்வு செய்து நட, 
மாவட்டவாசிகளும், விவசாயிகளும் முன்வர வேண்டும்.

கருவேல மரங்கள் 
சார்ந்த தொழிலுக்கு தேவை தடை: மாவட்டத்தில் கருவேல மரங்கள் சார்ந்த பல்வேறு
தொழில்கள் நடந்து வருகிறது. இவை நாம் பெருமைப்பட வேண்டிய விசயம் அல்ல. 
விறகு கரி, விறகு, வேர் கட்டை, தூர் கட்டை, வேலி கம்புகள் என கருவேல 
மரங்களின் பாகங்களை பிரித்து மேய்ந்து விற்பனை செய்கின்றனர். தனிநபர் 
லாபத்திற்காக ஒட்டு மொத்த மாவட்டமே பழியாவதை தடுக்க வேண்டும். அதற்காக இது 
போன்ற கருவேல மரங்களை சார்ந்த தொழிலுக்கு மாவட்டத்தில் அனுமதி மறுக்க 
வேண்டும். இரும்பு கரம் கொண்ட தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்க 
வேண்டும். உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் இது போன்ற தொழிலை 
ஊக்கப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து 
வந்து, இங்கு முகாமிட்டு, மாவட்டத்தின் வறட்சிக்கு வழிகாட்டும் 
விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். வெப்பமயமாவதால் குறிப்பிட்ட 
ஆண்டுகளில் உலகம் பெரிய இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 
ராமநாதபுரத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது, முன்கூட்டியே இங்கு 
பாதிப்புகள் வரலாம், என்பதால், இங்கு இது போன்ற கெடுபிடிகள் தவிர்க்க 
முடியாததாக இருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் குரல் இல்லை...:
வறட்சி, பின்தங்கி மாவட்டம் என தெரிவிக்கும் மக்கள் பிரதிநிதிகள், எதனால் 
இந்நிலையில் உள்ளது என்பதை அரசுக்கு தெரிவிப்பதில்லை. முழுக்க கருவேல 
மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இம்மாவட்டத்தை, சீரமைக்க எந்த குரலும் 
தரவில்லை. மாறாக கண்மாய்களில் விளைந்த கருவேல மரங்களை ஏலம் எடுப்பது, 
எடுத்து தருவதில் தான் மக்கள் பிரதிநிதிகளுக்கு நாட்டம் செல்கிறது. இன்னும்
சொல்லப்போனால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் வளர்வதை தான் மக்கள் 
பிரதிநிதிகள் விரும்புகின்றனர். நம்மை நாமே காக்க வேண்டிய கட்டாயம் 
இருப்பதால், பொதுமக்களே இவற்றை ஒழிக்க முன்வர வேண்டும்.

விவசாயிகள் சொல்வதென்ன...

ஸ்ரீதர்(உத்தரகோசமங்கை): கீழக்கரை, திருப்புல்லாணி உள்ள அதிகமான கருவேல 
மரங்களால், விவசாயிகள் கரிமூட்டம் போடும் தொழிலுக்கு மாறி விட்டனர். 
இவற்றின் வேர் பூமியின் கடைசி பகுதி வரை செல்வதால் நிலங்கள் கடுமையான 
வெப்பத்தை சந்திக்கிறது. நிலத்தடி நீரை காப்பாற்ற கருவேல மரங்களை ஒழிக்க 
வேண்டியது அவசியம்.

சேக்அப்துல்காதர்(எஸ்.பி.பட்டினம்):
திருவாடானை தாலுகாவின் கடற்கரை பகுதிகளில் கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன. 
இதை சமூக விரோதிகள் பயன்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். கருவேல மரங்களை 
அப்புறப்படுத்திவிட்டு நல்ல மரங்களை நடுவு செய்தால், அதன் பலனை எதிர்கால 
சந்ததியினர் அனுபவிக்கலாம்.

சுகுமாறன்(பரமக்குடி): கருவேல 
மரங்களால் காற்று மாசுபடுகிறது. இதைதடுக்க கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக 
அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புவி வெப்பமயமாகி வருவதை 
தடுக்கவும், ராமநாதபுரத்தை வறட்சியிலிருந்து மீட்கவும் கருவேலமரங்கள் 
ஒழிப்பு கோஷம் ஓங்க வேண்டும்.

ராசு(கமுதி): கருவேலமரங்களால் 
வெயில்காலத்தில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு ஏற்படுகிறது. கருவேல மரங்களை
வெட்டி எத்தனையோ பேர் பிழைப்பு நடத்துகின்றனர். இருந்தாலும் , இதை 
அழித்தால் விவசாயம் கைகொடுக்கும் என்பதால் பாதிப்பு வராது.


திருநாவுக்கரசு (எஸ். எம். இலந்தைக்குளம், கடலாடி): மித மழையில் விளையும் 
மிளகாய், குறுகியகால பயிரான தக்காளி, கத்தரிக்காய் போன்றவையும் கருவேல 
மரங்களால் பாதித்துவிட்டது. இவற்றை அகற்றவில்லை என்றால், இன்னும் ஐந்து 
ஆண்டுகளில் விவசாயிகள் இடம் பெயருவதை தவிர வேறுவழியில்லை.

அழிக்க 
வேண்டியது அவசியம்...: மாவட்டத்தில் மக்கள் தொகையை விட அதிகமாக காணப்படும் 
கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியமான ஒன்றாகிவிட்டது. "அரசு நிலம், 
தனியார் பட்டா நிலத்தில் விளைந்துள்ளது,' என, உரிமை கொண்டாட, இவை ஒன்றும் 
பாதுகாக்கப்பட வேண்டிய வஸ்து இல்லை. பாரபட்சமில்லாமல் அழிக்கப்பட வேண்டிய 
விஷ ஜந்தாகும். வெட்டினால் தழைக்கும் தன்மை கொண்ட இவற்றை, வேருடன் அழிக்க 
வேண்டும். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு நிதி ஒதுக்கி, இயந்திரங்கள் மூலம்
துரிதமாக பணி நடக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு இதில் இடம் கொடுக்க 
கூடாது. மாவட்டத்தில் தற்போதுள்ள கருவேல மரங்களில் 50 சதவீதத்தை ஒழித்தால் 
கூட, வறட்சியின் பிடியில் மாவட்ட மீள்வதை ஓரிரு ஆண்டில் நாம் உணரலாம். 
முழுமையாக ஒழித்து கட்டினால், கடலோர மாவட்டத்தின் பயனான, மழைபொழிவை நாம் 
ஆண்டுதோறும் அனுபவிக்கலாம். தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், 
தன்னார்வலர்கள், பொதுநல அமைப்புகள், தனியார் கிளப்புகள் போன்றவையும் இந்த 
விசயத்தில் முழுஈடுபட்டுடன் செயல்பட வேண்டும். அப்போது தான், வறண்டு வரும் 
ராமநாதபுரத்தின் நிலையை மாற்ற முடியும்.