Total Pageviews

Friday, 7 June 2013

உழவர்களை காப்பாற்ற வேண்டுமா ??.

உழவர்களை காப்பாற்ற வேண்டுமா ??.

கர்நாடக அரசு தண்ணீர் தந்தாலும் தராவிட்டாலும் நம் நிலத்தை பாதுகாப்பது 
நமது கடமை .உழவர்கள் இனி மேம்பட்ட விவசாயத்தை செய்யவேண்டும் .

மேம்படுத்தப்பட்ட விவசாயம் ;-
இந்த ஆண்டு விவசாயம் பண்ணமுடியாமல் போனதற்கு காரணம் "நாம்"தான்.இறைவனை திட்டுவதை நிறுத்திவிட்டு .ஒழுக்கத்தை வளர்ப்போம் .நல்வாழ்விற்கான படிக்கட்டில் முதல் படியில் நாம் ஏறுவோம் அடுத்த படியில் ஏற இறைவன் உதவி செய்வார்.
கீழுள்ள சில வழிமுறைகளை பின்பற்றினால் எதிர்காலத்தில் பஞ்சப்பாட்டு பாட வேண்டியதில்லை .
 1)இருக்கின்ற நீர்நிலைகளை தூர்வாரவிட்டலும் பரவாவில்லை, தயவுசெய்து பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டதீர் (சுத்தம் சோறு போடும் ).
2)விவசாயம் பண்ணமுடியவில்லை என்று உங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் காரர்களுக்கு கொடுக்கவேண்டாம். தமிழ்நாட்டில் விவசாயம் இல்லாமல் போனதிற்கு காரணம் மழை இல்லாமை ,மழை வேண்டுமானால் காற்று வேண்டும் ,காற்று வேண்டுமானால் மரம் வேண்டும் ,
மரம் வளர நிலம் வேண்டும் நிலத்தை எல்லாம் பங்குபோட்டு  கட்டிடம்  கட்டினால் மரமும் வளராது மழையும் வராது.முடிந்தவரை காற்றின் வேகத்தை தடுக்கும் உயரமான கட்டிடங்களை தவிர்ப்போம் .பஞ்சத்திற்கு பிழைக்க பரம்பரை சொத்தை விற்பதா??
3)சொந்த மண்ணில் இருபவனுகே தாய்நிலத்தின் மீது பாசம் இல்லை பிறகு எப்படி அன்னியருக்கு அக்கரை இருக்கும் .திராவிடக்கட்சிகளை நம்பி ஏமார்ந்தது போதும்.தமிழ் கட்சிகளை ஆதரிப்பீர் .(அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றகும்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து "பகிர் " செய்வீர்  
                                                                                                                                                                                                        


~~நன்றி~~

posted By
GVR..



No comments:

Post a Comment